உங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக எக்சிக்யூட்டர் ஒருவரை நியமியுங்கள்.
நீங்கள் உயில் எழுதும் போது உங்கள் விருப்பப்படி உங்கள் சொத்துக்களை நிர்வகிக்க, சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எக்சிக்யூட்டர்களை நியமிக்க வேண்டியிருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினரையோ அல்லது நண்பரையோ எக்சிக்யூட்டராகத் தேர்ந்த்தெடுக்க முடிவெடுத்தால் அவர்கள் நேர்மையானவராகவும் திறமை படைத்தவராகவும் உங்களைத் தாண்டி நீண்ட காலம் வாழக்கூடியவராகவும் (உங்கலைவிட வயது குறைந்தவராக) இருக்கும் வகையில் தேர்ந்தெடுங்கள். அவர்களை நியமிக்கும் முன், முதலில் அவர்களிடமிருந்து அனுமதி பெற்றுவிட வேண்டும். ஏனென்றால் எக்சிக்யூட்டராக இருப்பது என்பது அதிக நேரத்தை விழுங்கும் வேலை. பலர் இந்த வேலை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். வழக்கறிஞ்ர், அக்கவுன்டண்ட் அல்லது வங்கி அதிகாரி போன்ற தொழில் முறையிலான எக்சிக்யூட்டர்களை நியமிப்பது மற்றொரு தேர்வு ஆகும். இதற்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அந்தப் பணத்தை உங்கள் சொத்துககளிலிருந்து செலுத்தலாம். ஒரு தொண்டு நிறுவனத்தைக்கூட எச்சிக்யுட்டராக செயல்படும்படி கேட்கலாம் முதியவர்கள் எதிர்கொள்ளும் தனிமைப்படுத்துதல், புறக்கணிப்பு, வறுமை போன்றவற்றை நீக்க ஹெல்ப் ஏஜ் இந்தியா போராடுகிறது அவர்களுக்கு நல்ல ஜீவானாம்சம் பெற்றுத்தரப் பல நடவடிக்களை மேற்கொள்கிறது. ஹெல்ப் ஏஜ் இந்தியா இந்தச் சேவையைக் கட்டணம் பெற்றுக்கொண்டு செய்துதரும். முதியவர்களின் பிரச்சனைகளை கையாளும் தொண்டு நிறுவனமாக இருப்பதால் பொறுப்புகளை மிகத் திறம்படக் கையாள்வதுடன் சொத்து நிர்வாகத்தில் அதிகபட்ச நேர்மையுடன் இருப்பதையும் உறுதிசெய்வோம்.
உங்கள் சொத்துக்களை மதிப்பிடுங்கள்
இந்தப் பட்டியலை எளிதாகச் செய்ய முதலில் உங்களிடமிருக்கும் சொத்துக்களையும் நீங்கள் தர வேண்டிய கடன்களையும் இன்றைய மதிப்பின்படி கணக்கிடுங்கள். பிறகு உங்கள் சொத்துக்களின் மதிப்பு அனைத்தையும் கூட்டுங்கள் அதிலிருந்து நீங்கள் கொடுக்க வேண்டியவற்றை கழியுங்கள். பிறகு பிரித்துக் கொடுப்பதென்பதை எளிதாகத் தீர்மானிக்கலாம்.
நிதி சம்பந்தமான பிற தகவல்கள்
- ஒய்வு பெறுவதற்கு முன் நீங்கள் இறந்துவிட்டால் பெரிய அளவில் ஓய்வூதியச் சலுகை கிடைக்கும்படியான எந்தத் திட்டத்திலாவது உறுப்பினராக இருக்கிறீர்களா? அவ்வாறு இருந்தால் விரிவான பட்டியல் தயார் செய்யுங்கள். உங்கள் எம்ப்ளாயரிடமிருந்து அல்லது ஓய்வூதிய அலுவலகத்திலிருந்து அதற்கான தகவல்கள் கிடைக்கும்..
- எந்த ஒரு ட்ரஸ்ட் அல்லது சொத்தின் மூலம் தற்போது நீங்கள் எதாவது வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தால் அதைத் தனியாகப் பட்டியலிடவும்
- மனைவி /கணவன்/பெற்றோர்கள் போன்ற மற்றவர்களின் மரணத்தால் நீங்கள் பொருளாதார ரீதியாகப் பயனடையக்கூடும் என்றால் அதைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.
- பொருளாதார ரீதியாக உங்களைச் சார்ந்திருப்பவர்களைப் பட்டியலிடுங்கள். அது முன்னாள் மனைவி, உறவினர்கள் அல்லது குழந்தைகள், தத்துக் குழந்தைகள் ஆகியோராக இருக்கலாம். பின்வரும் முறையில் பட்டியலிட வேண்டும். குழந்தைகளுக்கு, உங்களைச் சார்ந்திருக்கும் உறவினர்களுக்குப் பாதுகாவலரை நியமிப்பது பற்றிப் பரிசீலிக்கலாம். ஒரு ட்ரஸ்ட் அமைப்பது பற்றியும் வழக்கறிஞரிடம் ஆலோசிக்கலாம்.
சார்ந்திருப்பவரின் பெயர். |
உறவு: |
பிறந்த தேதி: |
Monetary provision details : |
பாதுகாவலரின் முழுப்பெயர் : |
முகவரி : |
பின்கோடு : |
தொலைபேசி: |
No comments:
Post a Comment