Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, March 22, 2013

நினைவில்கொள்ள வேண்டியவை-(உயில் – சட்ட ஆலோசனை)


உங்கள் உயிலை மாற்ற வேண்டிய தருணம்
உங்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏதாவது நிகழ்ந்தால் உங்கள் உயிலை மீண்டும் மதிப்பீடு செய்து, அதை திருத்த வேண்டுமா என்று சிந்தியுங்கள். குடும்பத்தில் புதிதாக நிகழும் பிறப்பு, விவாகரத்து, உங்கள் பொருளாதாரச் சூழல் மாறுவது, நீங்கள் உயிலில் குறிப்பிட்ட ஒருவர் மரணமடைவது போன்ற சூழலில் நீங்கள் உயிலை மாற்ற நேரிடலாம். நீங்கள் திருமணம் செய்தால், புதிதாக ஒரு உயிலை எழுத வேண்டும். நீங்கள் விவாகரத்து செய்தால், உங்கள் முன்னாள் துணைவருக்கு நீங்கள் எழுதிவைத்தது செல்லாது. ஆனால் உயிலின் பிற பகுதிகள் செல்லுபடியாகும். பொதுவாக, நீங்கள் விவாகரத்து செய்தால், உயிலை மாற்றுவது நல்லது. நீங்கள் விரும்பும்போதெல்லாம் உங்கள் உயிலை நீங்கள் மாற்றலாம். ஆனால் அசல் ஆவணங்களில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், அது செல்லாமல் போய்விடும். கூடுதலாக, காகிதங்களை இணைத்துத்தான் உயிலை மாற்ற வேண்டும். இதில் கையெழுத்திட வேண்டும். சிறிய மாற்றம் என்றால் புதிய உயிலை எழுதுவது நல்லது. உயிலில் துணைப் பக்கங்களைச் சேர்ப்பதற்கு முன்பும் புதிய உயிலை எழுதுவதற்கு முன்பும் ஃபுரஃபஷனல்களின் உதவியை நாடுவது நல்லது.
உங்கள் உயிலை நீங்கள் திருத்தியெழுத வேண்டியதற்கான காரணங்கள்
  • உங்களுடைய சொத்தையும் உடமையையும் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பது மிகவும் புத்திசாலித்தானமான, யதார்த்தமான நடவடிக்கை.
  • சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் உயில் இல்லாவிட்டால், உங்களுடைய வாரிசுகள் குழப்பம், தாமதம், சட்ட ரீதியான செலவுகளுக்கு உள்ளாகலாம்.
  • முறையாக உருவாக்கப்பட்ட உயில் மன அமைதியைத் தருகிறது.
உங்கள் இறப்பிற்குப் பிறகு தேவைப்படக்கூடிய முக்கியமான ஆவணங்களையும் பொருள்களையும் பட்டியலிடுங்கள்.
முக்கியமான பொருள்களும் ஆவணங்களும் எங்கே இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் பட்டியலை உருவாக்குங்கள். இந்தப் பட்டியலைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். உங்கள் உயிலைச் செயல்படுத்துபவரிடமோ, நெருங்கிய சொந்தக்காரரிடமோ அவை எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்:
  • இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் (உங்கள் உயிலைப் படிப்பதற்கு முன் இதைப் படிக்க வேண்டியிருக்கலாம்)
  • தர்ம காரியங்களுக்குக் கொடுக்க வேண்டிய நன்கொடை குறித்த உங்கள் விருப்பம்.
  • உங்கள் மரணத்தைப் பற்றியும் இறுதிச் சடங்கு பற்றியும் தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல்.
  • சான்றிதழ், பாஸ்போர்ட், உரிமம், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், பத்திரங்கள் போன்ற பிற முக்கிய ஆவணங்கள் எங்கே இருக்கும் என்பது குறித்த விவரம்.
  • முக்கியமான சாவிகள் எங்கே இருக்கும் என்ற விவரம்.
  • வங்கி, குடியிருப்பு சங்கம், ஓய்வூதியம் வழங்கும் அமைப்பு, மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் போன்ற உங்கள் மரணம் குறித்த அறிவிக்க வேண்டிய அமைப்புகளின் பட்டியல்.
  • உங்கள் மரணத்துக்குப் பிறகு, ரத்து செய்ய வேண்டிய/திருப்பி அனுப்ப வேண்டிய பொருள்களின் பட்டியல் (உதா: பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, நூலக அட்டை, புத்தகங்கள்).
  • அழிக்க வேண்டிய பொருள்கள் (உதா. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரிவித்த பிறகு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை)

No comments: